• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு

November 27, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகளின்‌ நலனை மேம்படுத்தும்‌ நோக்குடன்‌ ஒரு லட்சம்‌ புதிய விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.

இத்திட்டம்‌ ரூ.5 ஆயிரத்து 25 கோடி மதிப்பீட்டில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் 6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 1235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க