• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவன், மனைவிக்கு இடையே தகராறு இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை

November 25, 2021 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அம்மன்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவரது மனைவி கிருபா (27). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் அவர்களே சமாதானம் அடைந்து கொள்வார்கள். வெங்கடேஷ் தனக்கு கிடைத்போனஸ் பணத்தை வீட்டிற்கு தராமல் அனைத்தையும் செலவு செய்து விட்டதாகத் தெரிகிறது.

இதனால் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தெரிந்து கொண்ட கிருபாவின் தாயார் அவரது வீட்டுக்கு வந்து சிறிது நாட்கள் தங்குமாறு கூறினார். ஆனால் கிருபா எனது வீட்டை விட்டு எங்கு வரமாட்டேன் என மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் திடீரென தூக்குபோட்டு கொண்டார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க