• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்!

November 24, 2021 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வருக்கு
நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்,பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாமீன் வழங்க அரசு மற்றும் மாணவியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி குலசேகரன், மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும்,கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க