• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

November 19, 2021 தண்டோரா குழு

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்ட பேராசிரியர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் ரகுநாதன். இவர் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி வாயிலில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது
மழை பெய்த நிலையிலும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக கல்லூரி வாசலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மேலும் படிக்க