• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

November 19, 2021 தண்டோரா குழு

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

அகில இந்திய தொழிற் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தனித்தேர்வர்களாக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

முதல் பிரிவு, மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி கருத்தியல் தேர்வும், 15ம் தேதி செய்முறை தேர்வும் சென்னை கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செயல்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதில், தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் பிரிவு விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க