• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இலவச சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை முகாம்

November 15, 2021

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை முகாம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்று காலை நடைபெற்றது.

முகாமில் லோட்டஸ் கண் மருத்துவமனையில் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.ஜே மதுசூதனன், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.

லோட்டஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.ஜே மதுசூதனன் கூறுகையில்,

முகாமில் கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை கொள்வது மிகவும் அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவர் தமிழ்செல்வன், டாக்டர் வித்யா டாக்டர் மகேஷ் கேட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க