• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாலிபருக்கு கத்திக்குத்து

November 13, 2021 தண்டோரா குழு

கோவையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(23). இவர் நேற்று புலியகுளம் சடையப்பன் தெருவில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தினர்.

இதில் அவருக்கு தலை, கை உள்பட இடங்களில் குத்து விழுந்தது. பின்னர் அவர்கள் மணிகண்டன் மற்றும் மாரியப்பனை மிரட்டி விட்டு சென்றனர். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக மணிகண்டன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கஞ்சா விற்பனையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள வினோத், மனோஜ் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க