• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

November 13, 2021 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை முருகன் கோயில் வீதியை சேர்ந்தவர் விஜய் (23). தொழிலாளி. இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவர் சண்டை சேவலை கொடுத்து விற்பனை செய்து தருமாறு தெரிவித்துள்ளார். விஜய் அந்த சேவலை விற்று பணத்தை கொடுத்து உள்ளார்.

இந்நிலையில், மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சபீர் என்பவரின் சேவல் தொடர்ந்து காணாமல் போனது. இதனை விஜய்தான் பிடித்து விற்பனை செய்து இருப்பார் என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் மதுக்கரை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சபீர் உட்பட அவரது நண்பர்கள் 5 பேர் அங்கு வந்து விஜயிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயை கத்தியால் குத்தினர். நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜய் பலியானார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் விஜய்யை கத்தியால் குத்தியது சபீர், அவரது நண்பர்கள் பினாஸ், தனுஷ் உட்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 5 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சபீர், பினாஸ்(26), தனுஸ்(21), போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த ஹரிஹரன்(21), சுந்தராபுரத்தை சேர்ந்த விநாயகம்(25) ஆகிய 5 பேரை செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க