• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

November 3, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் முஸ்லிம் மகளிர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள் மூலம் அந்தந்த மதங்களை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், ஆதரவற்ற விதவைகள் சிறுதொழில் செய்திட தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் அந்தந்த சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சங்கங்கள் மேலும் சிறப்பாக செயல்படும் விதமாக அந்தந்த மதங்களை சேர்ந்த சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களை சேர்ந்த சமூக பணிகளில் ஆர்வமாக உள்ள தகுதியான நபர்கள், அவர்களின் மதம் சார்ந்த சங்கங்களின் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க