• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்

November 2, 2021 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக பசிப்பிணி போக்குவது, கொரோனா கால பேரிடர் சமயங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவது, முக கவசம் மற்றும் சானிட்டைசர் கொரோனா கிட் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரு நகர் கிழக்கு,மேற்கு,கோல்டு வின்ஸ் பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி வார்டு 34,35,36 க்கு உட்பட்ட தூய்மைபணியாளர்கள் சுமார் 200 பேருக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இதில்,சுதந்திர தின விழிப்புணர்வு மாவட்ட தலைவர் காளியப்பன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலை உள்ளிட்ட புத்தாடைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் முகம்மது செமீக், முன்னால் தலைவர்கள் நந்தகுமார்,சுகுமார்,முன்னால் செயலாளர் ஜெகதீசன்,வார்டு செயலாளர் குபேந்திரன்,முன்னால் வட்டார தலைவர் லோகநாதன்,நேரு நகர் ரவிச்சந்திரன், செல்வராஜ்,ராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க