• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர் முதியோர் பராமரிப்பு சேவை மையம் துவக்கம் !

October 22, 2021 தண்டோரா குழு

கோவை ராம்நகரில் அதிக வசதிகளுடன் கூடிய கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர் முதியோர் பராமரிப்பு சேவை மையம் துவங்கப்பட்டது.

முதியோர்கள் பராமிரிப்பு சேவையில் பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள கிராண்ட் வேர்ல்ட் எல்டர் கேர் முதியோர் பராமரிப்பு நிறுவனம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,இந்நிறுவனத்தின் புதிய முதியோர் பராமரிப்பு கிளினிக் துவக்க விழா கோவை ராம் நகரில் நடைபெற்றது.நிறுவனத்தின் தலைவர் விட்டல் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மருத்துவர் ராஜ சபாபதி கலந்து கொண்டு புதிய மையத்தை துவக்கி வைத்து பேசினார்.

புதிய சேவை மையம் குறித்து, நிறுவனத்தின் செயல் இயக்குனர் விஷ்ணு விட்டல் கூறுகையில்,

முதியோர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியலாளர் , செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்த பராமரிப்பை இங்குள்ள முதியோர்கள் பயன் பெறலாம், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எப்படி குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறாரோ அதேபோல் முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் அவர்களை பராமரிக்கும் வகையில், முதியவர்களின் தேவைக்கேற்றவாறு, சிகிச்சை அளிப்பதோடு ஒரு முழுமையான அணுகு முறையுடன் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் சிறந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், இங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விழாவில் மருத்துவர் ஃப்ளோரா அலெக்ஸ், வழக்கறிஞர் நாக சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க