• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு சீல் !

October 21, 2021 தண்டோரா குழு

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் ரோலிங் டப் கபே என்ற தனியார் ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மது பானம் கலந்து ஐஸ் கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடியாக கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மது பாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன‌. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கும் அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க