• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் விற்பனை செய்வதாக ரூ.1 லட்சம் மோசடி

October 20, 2021 தண்டோரா குழு

கோவையில் ராணுவ அதிகாரி என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டேவிட் ஜான் (26). டிரைவர். இவர் பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக (ஓ.எல்.எக்ஸ்) இணையதளத்தில் தேடியுள்ளார். அதில், இன்னோவா கார் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கார் மாடல், விலை உள்ளிட்ட விவரங்களை டேவிட் ஜான் கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ராணுவ அதிகாரி என கூறி அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். மேலும் கார் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.99,400 அனுப்பும் படி தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து டேவிட் ஜான் அந்த நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ‘போன் பே’ மூலமாக ரூ.99,400 அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நூதன மோசடியில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க