• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை, கே.ஜி.மருத்துவமனையில், ‘சிறார் இருதய பாதுகாப்பு திட்டம் துவக்கம் !

October 13, 2021 தண்டோரா குழு

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் கோவை, கே.ஜி.மருத்துவமனையில், ‘சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை’ இன்று துவக்கி வைத்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறவி இதய நோயுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர்,பிறவி இதயக்கோளாறு காரணமாக இறக்கின்றனர்.பிறவி இதய குறைபாடுகளில் இதய சுவர்களில் துளைகள், குறுகிய வால்வுகள் ஆகியவை அடங்கும்.

இன்றைய சூழலில், 4 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகள், தவறான உணவு பழக்கம் உள்ளிட்டவையே இதற்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதய பரிசோதனை செய்வதன் மூலம் முன்கூட்டியே சிகிச்சையளித்து காப்பற்றலாம்.
அந்தவகையில், கே.ஜி.அறக்கட்டளை சார்பில், பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு, இலவசமாக இருதய பரிசோதனை மேற்கொண்டு, அதன் மூலம் இதய நோய் உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அரசு காப்பீடு அல்லது தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

அதன்படி, கோவை கே.ஜி.,மருத்துவமனையில் ‘இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை’ மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஜார்கண்ட், அசாம் மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் 10 பேருக்கு, இலவசமாக இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் தலை சிறந்த இந்தியர்களுக்கு கே.ஜி.மருத்துவமனை சார்பில்
‘டைனமிக் இந்தியன் ஆப் தி டெக்கடு’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று, அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, ‘டைனமிக் இந்தியன் ஆப் தி டெக்கடு’ என்ற விருதினையும், நினைவு பரிசுகளையும் கே.ஜி.மருத்துவமனை நிறுவன தலைவர் பக்தவத்சலம் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க