• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சன்ரைசஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து வார்னர் நீக்கம்!

May 1, 2021 தண்டோரா குழு

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடைசி இடத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் உள்ளது.இந்த தொடரில் சன்ரைசஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்த அணி இதுவரை நடந்த 6 லீக் ஆட்டங்களில் 1ல் வெற்றியையும் மற்ற 5ல் தோல்வியையும் தழுவியுள்ளது.

இந்நிலையில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க