• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து உ.பி.முதல்வர் பிரச்சாரம்

March 31, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி இரட்டை விரலை காமித்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணி நடைபெற்றது. புளியகுளம் பகுதியில் துவங்கிய வாகன பேரணி ராமநாதபுரம், சுங்கம் ,உக்கடம் வழியாக சென்று தேர்நிலை திடலை வந்தடைந்து. இதில் பாஜக வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டு சென்றனர். தொடர்ந்து உத்திரபிரதேச முதல்வர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடினார்.

மேலும் படிக்க