• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவினாசிலிங்கம் பல்கலை 32 வது பட்டமளிப்பு விழா – இணையம் வாயிலாக மத்திய அமைச்சர் பங்கேற்பு

January 21, 2021 தண்டோரா குழு

அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வீடியோ கன்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு அவினாசி லிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, பல்கலைக்கழத்தின் வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பழமையான, புகழ்வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது.இந்தாண்டு இளநிலையில் ஆயிரத்து 893 பேரும், முதுநிலையில் 534 பேரும், ஆய்வியல் நிறைஞர் (எம்.எஸ்.சி) 40 பேரும், முனைவர் பட்டத்தை 39 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 506 பேர் பெற உள்ளனர்.கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் இணையம் வழியாகவே மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.166 பேர் மட்டும் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் பெற உள்ளனர்.இதில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இணையம் மூலம் பட்டங்கள் வழங்கி மாணவிகள் மத்தியில் வீடியோ கன்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார். அவருக்கு எங்கள் பல்கலைக்கழகம் மூலமாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளோம் என்றார்.

மேலும் படிக்க