கோவையில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,749 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 664 ஆக உயர்ந்தது. அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,531 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 554 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு