• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்!

December 2, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கோவை அரசு கலைக் கல்லூரி இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 8 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்றின் வீரியம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக அறிவியல் பாட துறைகளில் முதுகலை பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இன்று வகுப்புகள் துவங்குகிறது.இதற்காக கல்லூரி உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையும் போதே தெர்மல் ஸ்கேனர் கொண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், சானிடைசர் பயன்படுத்திய பிறகே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களையும், வகுப்பறையையும் சந்திப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க