• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

36 நாட்களில் 15,251 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்குரு !

November 2, 2020 தண்டோரா குழு

அமெரிக்க பூர்வகுடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் இனிதே நிறைவு பெற்றது.

டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் (Isha Institute of Inner Science) இருந்து மஹாளய அமாவாசை தினமான செப்டம்பர் 17-ம் தேதி அவர் தனது பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, செருக்கி லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட 19 மாகாணங்களுக்கு பயணம் செய்தார்.

பயணத்தின் வழிநெடுகிலும் அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சார முக்கியத்துவம் மிகுந்த பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றார். குறிப்பாக, அமெரிக்காவின் முதல் தேசிய சின்னமாக கருதப்படும் 867 அடி உயரம் கொண்ட மடோ திப்பிலா கோபுரத்தையும் பார்வையிட்டார். இந்த இடத்தை 20 மாகாணங்களைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் புனித ஸ்தலமாக கருதுகின்றனர்.

இதேபோல், லகோட்டா மற்றும் க்ரொவ் மாகாணத்தின் தலைவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும், பூர்வகுடி மக்களின் தினமாக அனுசரிக்கப்படும் அக்டோபர் 12-ம் தேதி கிராமி விருது வென்ற புகழ்பெற்ற ப்ளாக் ஐட் பீஸ் (Black Eyed Peas) இசை குழுவினருடன் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்.

இந்தப் பயணத்திற்கு இடையே பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்குருவை சந்தித்து பேசினர். ஸ்மித்தின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின் போது, அவரது குடும்பத்தினர் சத்குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆன்மீகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

26 நாட்களாக தொடர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் பயணம் சில தினங்களுக்கு முன் இனிதே நிறைவு பெற்றது.

மேலும் படிக்க