• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! – நடிகர் சிவக்குமார்

September 25, 2020 தண்டோரா குழு

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பி கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில்,தற்போது சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார்.அவரது மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகர் சிவக்குமார் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி

இவ்வாறு கூறியுள்ளர்.

மேலும் படிக்க