• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி

September 22, 2020 தண்டோரா குழு

கோவையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா.இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் இன்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்த நிலையில்,ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினம் கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார்.அப்போது அந்த பெண் இளைரை தள்ளி விட்டு சப்தம் எழுப்பவே, அருகில் இருந்த பொது மக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப்,ரத்துல் என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க