• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு குறித்து கண்காணிக்க அதிகாரி நியமனம்

August 31, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் போலீசார் குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு வாரத்தில் உயர் அதிகாரிகள் உட்பட 25 போலீசாருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். நேற்று உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என இருவருக்கும் தோற்று உறுதியானது.கொரோன தொற்றுக்குள்ளாகும் போலீசார் குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரன் கூறியதாவது,

அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பிரத்தியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை முழு ஊரடங்கு இருந்த போது பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. தற்போது போலீசார் சட்ட ஒழுங்கு போக்குவரத்து குற்ற சம்பவங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசாருக்கு பாதிப்பு அதிகரிக்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போலீசார் இது குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தகவல்களை தினமும் பெற்று உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார் அதன்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகரில் 2500 போலீசாருக்கு சானிடைசா், முகக்கவசம், கையுறை, கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து போலீசாரும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க