• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முதன்மை தலைமை அதிகாரி அலுவலகம் முற்றுகை

August 31, 2020 தண்டோரா குழு

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.

கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி,குப்பைகளை அகற்றுவது என அடிப்படை வசதிகளை சரி வர அடுக்குமாடி நிர்வாகம் செய்வதில்லை என குடியிருப்பில் வசித்து வருபவர்கள் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தலைமை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,

பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருவதாக அடுக்கு மாடி நிர்வாகம் உறுதியளித்த படி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதாகவும், 850 குடியிருப்புகள் உடைய இந்த வளாகத்தில் குறிப்பாக குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை எனவும் போர் வாட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றனர்.

தற்போது உள்ள சில டவர்களில் ஒரு லிப்ட் மட்டுமே இயக்கப்படுவதாகவும் பராமரிப்பு செலவு என சதுர அடிக்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி என செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும் கூறினர்.
மேலும், ல்ன்கரை கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கார்பஸ் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று கூறிய அவர்கள், அனைத்து வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

குடியிருப்பு வாசிகள் தங்களது,
கோரிக்கைகளை முன் வைத்து அங்கு வந்த முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து அவர்களிடம் பேசிய முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவி, நிர்வாக தரப்புடன் பேசி அனைத்தும் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதேபோல, 10 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும்பராமரிப்பு கட்டணம் 2 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படமாட்டாது எனவும் உறுதியளித்தார்.

மேலும் படிக்க