• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

August 28, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் மற்றும் ஜே இ ஈ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜே இ ஈ தோ்வு நடத்துவதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணிக்கூண்டு பகுதியில் காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் எம் என் கந்தசாமி பொருளாளர் சௌந்தர்,சாய் சாதிக், திலகவதி, கணபதி சிவகுமார், குருசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க