August 27, 2020
தண்டோரா குழு
கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்த பால கிருஷ்ண தாஸ் (எ) பாலாஜி (40).இவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதனை தனது மெகா கே.பாலாஜி பாபு பாலா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைக்க பெற, பால கிருஷ்ணதாசை காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில்அவர் ஆபாச படஙகளை பதிவேற்றம் செய்தது உறுதியானது. காவல் துனை ஆய்வாளர் முத்துவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார், பால கிருஷ்ணதாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாநில தலைமை காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் சிறுவர்கள் குறித்து ஆபாச படம் வீடியோ பதிவேற்றம் செய்வது, அதனை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, குறித்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறான,செயல்களில் ஈடுபடுவார்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை, தமிழக போலீசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.