• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மந்தம் – கோவையில் பூ வியாபாரிகள் வேதனை

August 21, 2020 தண்டோரா குழு

ஓணம்,மற்றும் விநாயகர் சதுர்த்தி சீஸனை முன்னிட்டு வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாக கோவையில் பூ வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை வழக்கமாக அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா கால ஊரடங்கால் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்க அரசு மறுத்துள்ள நிலையில், பொது மக்கள், வீடுகளிலேயே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளதால் குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை கோவையில் சூடு பிடித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா கால ஊரடங்கால் பூக்கள் விற்பனை வழக்கத்தை விட மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பன் கூறுகையில்,

கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் மற்றும் சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து,அரளி, துளசி உள்ளிட்டவை வெளி இடங்களில் சாதாரணமாக வருவதை காட்டிலும் குறைவான வரத்தே இருப்பதாகவும், மேலும் வழக்கத்தை விட பூக்கள் வாங்க பொதுமக்கள் இந்த வருடம் அதிக ஆர்வம் காட்டாத காரணத்தால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கேரளாவிலும் ஓணம் பண்டிகை தற்போது கரோனா பாதிப்பால் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு வீடுகளில் எளிய முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளதாலும் விற்பனை சரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க