• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை

August 11, 2020 தண்டோரா குழு

ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையில், பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்நிலையில் உலகில் முதல் முறையாக ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய அதிபர் புதின், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார். அடுத்தக்கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் இந்த தடுப்பு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு நாளை கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க