• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜக சார்பில் முருகன் வேடமணிந்து வேல் பூஜை

August 10, 2020 தண்டோரா குழு

‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை 6மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வரைந்து பூஜை செய்தனர்.இதன் ஒரு பகுதியாக
பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் வடவள்ளி மண்டல், 55 வது வார்டு சின்மயா நகர் மற்றும் குறிஞ்சிமின் நகர் பகுதிகளில் ஷஷ்டி தினத்தன்று வேல் பூஜை, சக்தி கேந்திர பொறுப்பாளர் சௌமியா பிரதீப் இல்லத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மகளிர் அனைவரும் கந்தர் ஷஷ்டி கவச பாராயணம் செய்தனர்.பால், தயிர், குங்குமம், பன்னீர்,சந்தனம் போன்றவற்றை வைத்து வேலுக்கு அபிஷேகம் சிறப்பாக செய்யப்பட்டது. குழந்தைகள் முருகர் வேடம் போட்டு கலந்து கொண்டனர்.கந்தனுக்கு பூஜை ஆரானைகள் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க