• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

August 6, 2020

கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கொரோனா ஊரடங்கால் உக்கடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளது.மேலும் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில், உதவி ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர், மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். தினமும் மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க