• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத்தம் சொட்டச்சொட்ட கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர்

July 30, 2020 தண்டோரா குழு

கோவையில் சிலர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி வாலிபர் ஒருவர் ரத்தம் சொட்டச்சொட்ட கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ராஜரத்தினம்.இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி உயிரிழந்துவிடவே மனமுடைந்த ராஜரத்தினம் கோவையிலேயே சாலையில் தங்கி வந்துள்ளார்.இந்த சூழலில்,கோவை வாலாங்குளம் பகுதிக்கு சென்று மீன் பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்த அவர், இன்று காலை அங்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு இருந்தவர்களுக்கும் ராஜரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ராஜனத்தினம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து முகம் மற்றும் கை, கால்களில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ராஜரத்தினம் அங்கு தனக்கு நீதிவேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜரத்தினத்திடம் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க