• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

, இ–பாக்ஸ் கல்லுாரிகள் சுதர்சன் இன்ஜினியரிங் கல்லுாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 28, 2020 தண்டோரா குழு

சென்னை அருகே உள்ள ஆர்எம்கே இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஆர்.எம். கிஷோர் முன்னிலையில், புதுக்கோட்டை, சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரிகள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

திருச்சி பகுதியில் உள்ள முதலாவது இ–பாக்ஸ் கல்லுாரியாக சுதர்சன் இன்ஜினியரிங் கல்லூரி உருவாகியுள்ளது. இந்த கல்லூரியில், கற்பித்தல், கற்றல், திறன்மேம்பாடு போன்றவைகளை முறையாக தொழில்நுட்ப ரீதியாக ஆம்பிஷாப்ட் நிறுவனம் மேற்கொள்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான பயிற்சி,வேலை வாய்ப்பு பெற்றுத்தருதல் போன்றவைகளை ஆம்பிஷாப்ட் நிறுவனம் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம், ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் தலைமை இடமான சென்னையில், நிறுவனத்தின் தலைவர் கிஷார் முன்னிலையில் கையெழுத்தானது.

இ – பாக்ஸ், உலகின் மாபெரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் தளமாக உள்ளது. பல்வேறு இன்ஜினியரிங் துறையில், திறமைகளை மேம்படுத்தவும், தானியங்கி முறையில் மதிப்பீடுகளை செய்யும் வகையிலும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், நீட் போன்றவைகளைக் கொண்டுள்ள இ–பாக்ஸ், நிபுணர்களின் பல்வேறுகட்ட மதிப்பீட்டுக்குப்பின் இவற்றை இணைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்கள், இ–பாக்ஸ்சை, கற்பித்தலுக்கும், திறன் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றன.

சுதர்சன் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும், இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள், நிபுணத்துவமிக்க ஆசிரியர்களின் கற்பித்திலையும் கலந்து, கற்கும் வாய்ப்புகளை விரைவில் பெற உள்ளனர். ஒவ்வொரு வகுப்புகளும், பல்வேறு வகையான செயல் விளக்கங்கள், பயிற்சி சார்ந்த கல்வி பயிற்சிகளை கொண்டவையாக இருக்கும். இது மாணவர்களின் அறிவையும், திறமையையும் மேம்படுத்த உதவும். இறுதியாண்டு மாணவர்களுக்கு, வழக்கமான பாடங்களை தவிர திறன்மேம்பாட்டு பாடங்கள், முன்னணி நிறுவனங்களில் வேலைக்கான தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான தேர்வுகள் போன்றவை இணையாக நடத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தில், சுதர்சன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் விஜய் கே சுந்தரம், ஆம்பிஷாப்ட் தொழில்நுட்பங்கள் கார்பரேட் வணிக பிரிவு தலைவர் செந்தில் பெல்லுகுட்டி ஆகியோர், ஆர்எம்கே இன்ஜினியரிங் கல்வி நிறுவன குழுமங்களின் துணைத்தலைவர் ஆர்.எம் கிேஷார் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க