• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது !

July 25, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது.இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இந்த நேற்று வெளியிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு நேரத்தில் அதற்கு முந்தைய தினம் சாலைகளில் பொதுமக்கள் பல்வேறு அத்தியாவாசிய பொருட்களை வாங்க சமூக விலகல் இல்லாமல் நெருக்கமாக கூடினர்.இதனை தவிர்க்க வேண்டி மாலை ஐந்து மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மாலையிலேயே அடைக்கப்பட்டன.இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்மாலையிலேயே ஊரடங்கு துவங்கியதால் உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க