• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் நலன் கருதி ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் இன்று முதல் மூடல் !

July 20, 2020 தண்டோரா குழு

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல துணி கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் – covid-19 தாக்கம் முடிந்த பின்னர் திறக்கப்படும்
என கடை உரிமையாளர் சிவ கணேஷ் அறிவித்துள்ளார்.

கோவை கிராஸ் கட் சாலையில் ஏராளமான ஜவுளி நிறுவனங்களும்,வணிக கடைகளும் உள்ளது. இதில் கோவை மக்களின் பிரதான துணி கடையாக உள்ளது ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ்.இந்த நிலையில் அதன் உரிமையாளர் சிவ கணேஷ் தற்போது covid-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் உடல் ஆரோக்கியத்தை எண்ணியும் இன்று முதல் இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை கடையை தற்காலிகமாக மூடி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தற்போது இந்த covid-19 வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அரசாங்கத்திற்கும் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் அனைத்து தரப்பினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் எங்களுடைய ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை தற்காலிகமாக மூடுகிறோம். எங்களுடைய முக்கிய நோக்கம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் பொதுமக்களின் உடல்நலம் ஆகும் இந்த தாக்கம் எப்போது குறைகிறதோ அதுவரை எங்களுடைய கடையை தற்காலிகமாக மூடி உள்ளோம்.இது நாங்கள் எடுத்த தன்னிச்சையான முடிவு எங்களுடைய சங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை எங்களுடைய நிறுவனத்தில் 600 ஆட்கள் பணியாற்றுகின்றனர் அவர்கள் அனைவருக்கும் கடந்த ஊரடங்கு காலத்தின்போது வழங்கியது போல் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்னர் முதல்வரின் covid-19 தடுப்பு நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க