• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா மாநகராட்சி ஆணையர் ஆய்வு

June 11, 2020 தண்டோரா குழு

தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா? கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ உயர்நீதிமன்ற உத்தரவின்படி,ஆக்கிரமிப்பு கடைகள்‌ ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ அகற்றப்படுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலார்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு களஆய்வு செய்தார். அப்போது, காவல்துறை துணை ஆணையாளர்‌ (சட்டம்‌ ஒழுங்கு) எல்‌.பாலாஜி சரவணன்‌ மற்றும்‌ உயர் அதிகாரிகள்‌ பலர்‌ உடனிருந்தனர்.

மேலும், கூட்டம் அதிகம் கூடும் கோவை மத்திய மண்டலத்தில்‌ அமைந்துள்ள தியாகி குமரன்‌ மார்க்கெட்‌டில் முக கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌‌ நேரில்‌ களஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க