• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

June 6, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,423.பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில்
35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரேநாளில் 633 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,395 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 13,503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 16,022 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,76,695 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து 7 ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க