• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் !

May 15, 2020 தண்டோரா கு ழு

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும் திரையரங்கங்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ஏனெனில் இப்போதிருக்கும் சூழலில் தனி மனித இடைவெளி என்பது மிக நம் வாழ்க்கைச் சூழலில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்த ஊரடங்கால் திரைத்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர்.

இதற்கிடையே கொரோனா காரணமாகத் திரையுலகம் முடங்கியுள்ளதால் ரிலீசுக்குத் தயாராகவுள்ள படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் நேரடி டிஜிட்டல் ரிலீசுக்காகக் கைப்பற்றி வருகின்றது.அந்த வகையில் தம்பி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவான படம் ‘பொன்மகள் வந்தாள்’. புதுமுக இயக்குனர் ஜே.ஜே. பிரிட்டோ இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டு இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் மார்ச் 27- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே,’பொன்மகள் வந்தாள்’ படத்தை அமேசான் பிரைம் சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிலையில் இப்படம் வரும் மே 29- ஆம் தேதி வெளியாகிவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதைப்போல்
நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் ’பெண்குயின்’ படத்தில் நடித்துள்ளார். கர்ப்பிணிப் பெண் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியானது. முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்நிலையில் ’பெண்குயின்’ படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க