• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் – தமிழக அரசு

May 5, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின்கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை முந்தைய கணக்கீட்டின்படியோ அல்லது அவர்களது மின்அளவியில் உள்ள மின்நுகர்வுக்கு ஏற்பட திருத்தப்பட்ட பட்டியல்படியோ 22.05,2020 வரை மின் கட்டணம் செலுத்தலாம்.

வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும். எனவே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்.

25.03.2020 முதல் 17.05.2020 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை 22.05.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

மேலும் படிக்க