• Download mobile app
21 Apr 2026, TuesdayEdition - 3723
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“விராட் கோலியின் காதலி யார்?” பள்ளித் தேர்வு வினாவினால் சர்ச்சை

October 17, 2016 தண்டோரா குழு

மும்பையில் ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளில்,“விராட் கோலியின் பெண் நண்பர் (கேர்ள்ப்ரெண்ட்) யார்?” என்ற கேள்வி இடம் பெற்றள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு தொடர்பான தேர்வில்,“கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தோழியின் பெயர் என்ன?” என்று கேட்டிருந்தனர். இதுமட்டுமின்றி இந்த கேள்விக்குப் பதில் தேர்ந்தெடுக்கும் வகையில் மூன்று விடைகளை அளித்துள்ளனர். அதில் சரியான பதில் தேர்வு செய்வதற்காக பிரியங்கா, அனுஷ்கா, தீபிகா என்று கொடுத்திருந்தனர். தற்போது இந்த கேள்வி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட்நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாயின.மேலும் இவர்கள் இருவரும் ஷாம்பூ விளம்பரத்தில் ஒன்றாக நடித்தனர். இதன் பிறகே இருவரும் காதலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கோலியும்,அனுஷ்காவும் ஜோடியாக வலம் வருவதை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட இக்கேள்வியால் மீண்டும் இருவரின் பெயர் ஊடகங்களில் சர்ச்சை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க