சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்தவர் நடிகை அமலா பால். இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. அதோ அந்த பறவை போல படம் திரைக்குவரவுள்ளது.
தலைவா’படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார். தொடர்ச்சியாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதிலளித்து வந்தார். தற்போது மும்பையை சேர்ந்த பவ்நிந்தர் சிங் எனும் பாடகரை திருமணம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை த்ரோ பாக் என குறிப்பிட்டு பவ்நிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது. லிவிங்டுகெதரில் இருந்த இவர்களை திருமண கோலத்தில் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது