• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் ‘சினோரியோ 2020 ‘ கலாச்சார விழா

March 3, 2020

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சினோரியோ 2020 என்னும் கலாச்சார விழா நடைபெற்றது.

கோவை நவஇந்தியா சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் சினோரியா என்னும் கலை விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த கல்லூரி வளாகத்தில் சினோரியோ 2020 என்னும் கலாச்சார விழா நடைபெற்றது.

இவ்விழாவினை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் கருணாகரன் குத்து விளக்கு ஏற்றி தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் மாநில அளவில் இருந்து 70க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், இந்தநிகழ்ச்சியில் பிகில் பட நாயகி அம்ரிதா ஐயர், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
விழாவின் நிறைவாக வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவினை மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் படிக்க