• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைட்வாஷ் ஆன இந்திய அணி

February 11, 2020

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 – 0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இதனைத்தொடர்ந்து ஒரு நாள் தொடர் நடைபெற்றது.

இதில்முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் சதமும், ஷ்ரேயஸ் ஐயர் அரைசதமும் அடித்தனர். 50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் குவித்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய நியூஸிலாந்து அணி, 48 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதன்மூலம் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வைட்வாஷ் செய்துள்ளது.

இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் கடைசியாக தோற்றது 1989 மார்ச் மாதம் ஆகும். அதன்பின்னர் இந்தியா வைட்வாஷ் செய்யப்பட்டது இப்போதுதான்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா உடன் நடைபெற்ற தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தாலும், 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு ஆட்டம் நடைபெறவில்லை. எனவே அதனை வைட்வாஷாக கருத முடியாத சூழலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்திய அணி மீண்டும் வைட்வாஷ் ஆகியுள்ளது.

மேலும் படிக்க