• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையத்தை கலக்கும் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகளின் புகைபடங்கள்!!

February 4, 2020 தண்டோரா குழு

ஒரு ஓவியத்தின் மூலம் மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையாக எளிதில் வரைந்து புரிய வைக்க முடியும் என்பது தான் ஓவியத்திற்கு உண்டான தனி சிறப்பே. அந்த வகையில் ஓவியம் என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் தான்.

அவரைது ஓவிங்கள் அனைத்தும் உயிர் பெற்று புகைப்படங்களானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருக்கும். அந்த கற்பனையை நிஜமாக்கியுள்ளார் பிரபலமான போட்டோகிராபர் வெங்கட்ராம். பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை அவர் எடுத்துள்ளார்.

ஓவியங்களில் உள்ளது ஆடை, அணிகலன், அலங்காரம், பாவனை என அனைத்தும் அப்படியே அச்செடுத்தது போன்ற தோற்றத்தில் பிரபல முன்னணி நடிகைகளை வைத்து அவர் படம் பிடித்திருக்கிறார். இதில், சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸி பிரியதர்ஷன், லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா, நதியா ஆகியோர் ஓவிய புகைப்படங்களில் மிக அழகாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்கள்.

அதிலும் சிறப்பே ஓவியங்களில் உள்ள முகத் தோற்றத்திற்குப் பொருத்தமான நடிகைகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த புகைபடங்களை ஜி.வெங்கட்ராமன் லிமிடெட் எடிசன் 2௦2௦ காலண்டருக்காக எடுத்துள்ளார். தற்போது இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க