• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் !

February 4, 2020 தண்டோரா குழு

துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கோலிவுட் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் இயக்கிய அடுத்த திரைப்படமான ’மாபியா’ என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 43 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தை தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

மேலும் படிக்க