வருகிற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையில், விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்