• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி…!

January 24, 2020 தண்டோரா குழு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக களமறிங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில், முன்ரோ அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சிதறவிட்டனர். நியூசிலாந்து 80 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மார்டின் குப்தில் 19 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்திருந்த போது ஷிவம் துபே பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன்னும் அதிரடியை வெளிப்படுத்தி நியூசிலாந்து ரன் மளமளவென உயர்ந்தது. முன்ரோ, வில்லியம்சன் இருவரும் அரைசதம் அடித்து அவுட்டாகினர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். ரோஹித் சர்மா 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடியது. கோலி 45 ரன்னிலும், ராகுல் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடிய ஷிரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக இந்திய அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடர்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க