• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின்,சேவாக் சாதனையை முறியடித்த விராட் கோலி

October 11, 2019 தண்டோரா குழு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று புனே நகரில் தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலியும் ,ரகானேவும் களத்தில் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26 வது சதத்தை பதிவு செய்தார்.இதையடுத்து ரகானே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 7-வது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். மேலும் 7 முறை இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரின் சாதனையையும் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் மற்றும் சேவாக் இருவரும் முறையே தலா 6 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 81 போட்டிகள் விளையாடியுள்ள கோலி தனது 41 டெஸ்ட் போட்டிகள் வரை இரட்டைச் சதத்தை ருசிக்கவேயில்லை. ஆனால் அடுத்து விளையாடிய 41 போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்து வியக்க வைத்துள்ளார். இந்த 7 இரட்டைச் சதங்களுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அடிக்கப்பட்டவை என்பது மற்றுமொரு சிறப்பு.

மேலும் படிக்க