• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுப்மன் கில் உள்ளே ராகுல் வெளியே – தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

September 12, 2019 தண்டோரா குழு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி மூன்று ‘டுவென்டி-20’, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி-20’ போட்டி, வரும் 15ம் தேதி தரம்சாலாவில் நடக்கவுள்ளது. டெஸ்ட் தொடர் வரும் அக்., 2ல் துவங்குகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில்,தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு, சுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணி பட்டியல் பின்வருமாறு,

விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (VC), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (WC), விருத்திமான் சஹா (WC), R அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பூம்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க