நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், மெர்சல் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் நடிகர் அப்துல் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து நடிகர் அப்துல், ‘நான் விஜய்யின் கேரவன் பக்கத்தில் நின்றிருந்தேன், அவர் கேரவனில் இருந்து இறங்கி வந்து காரில் ஏறிச் சென்றார். சில தூரம் சென்ற பிறகு அவர் காரை நிறுத்திவிட்டு என்னை அழைத்தார். என்ன ஆச்சு, எதுவும் கேட்கனுமா இல்ல சொல்லனுமா என்று என்னிடம் கேட்டார். நான் உங்க கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு சொன்னேன். அதற்கு அவர் படமே நடிச்சாச்சு அப்புறம் என்ன என்று கேட்டார். அதற்கு நான் இல்ல அண்ணா கெட் அப்-ல இருக்கு என்றேன். பிறகு எனக்காக கிழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்’ என்று கூறியுள்ளார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்