• Download mobile app
10 Dec 2025, WednesdayEdition - 3591
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடைசி போட்டியில் மாஸ் காட்டி வெற்றியோடு விடைபெற்றார் இலங்கை வீரர் மலிங்கா

July 27, 2019 தண்டோரா குழு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்று வெற்றியோடு விடைபெற்றார்.

இலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா சதம் (111 ரன், 99 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்காளதேச அணி 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா, 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியோடு அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும் அவர் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து ஆடுவார். இந்த போட்டிக்கு பிறகு மலிங்காவை தோளில் தூக்கி அந்த அணி வீரர்கள் சுற்றி வந்தனர், மற்றும் அனைத்து வீரர்களும் வரிசையில் நின்று தங்களது பேட்டை தூக்கி அவருக்கு மரியாதையை செலுத்தினர். லசித் மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க